Wednesday, July 30, 2008

அலையாத்தி காடுகளின் அறிஞர் திரு.கள்ளன் பொக்கூடன்

26 டிசம்பர் 2004 காலை நேரத்தை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயற்கை சுனாமியாக வந்து உயிர், பொருள்,சேதத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் விவசாய நிலங்களை பயிரிட ஏற்றதாக மாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் அலையாத்தி காடுகள் இருந்த முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருந்ததும், பங்களாதேஷை அதிக உயிர், பொருள் சேதமின்றி நவம்பர் 2007 சூறாவளியிலிருந்து காப்பாற்றியதும் அலையாத்தி காடுகள்தான் என்பது வரலாறு. சுந்தரவனக்காடுகள் என்றழைக்கப்படும் மேற்குவங்கம், பங்களாதேஷ் பகுதிகள் தான் உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் உள்ள பகுதி. அடுத்தது தமிழகத்தின் பிச்சாவரம் பகுதிகள் என்பது குறிப்பிடதக்கது. திரு.கள்ளன் பொக்கூடன் என்ற இயற்பெயர் இவரது அலையாத்தி காடுகள் பற்றிய அறிவினாலும், 20 வருடங்களாக 10,000 நாற்றுக்களுக்கு மேல் நட்டு பராமரித்ததாலும் அவற்றின் அருமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வதாலும் இன்று அவர் திரு.கண்டல் பொக்கூடன் என்று எல்லோராலும் அறியப்படுகிறார். (மலையாளத்தில் கண்டல் என்றால் சதுப்புநிலக்காடுகள் என்று அர்த்தம்.) கேரளமாநிலம், கண்ணூர் மாவட்டம், எழம் கிராமத்தை சேர்ந்த அதிகம் படிக்காத விவசாயக் கூலி என்பது குறிப்பிடதக்கது. 1989 முதல் அவர்களது வாழ்வாதாரமான அலையாத்தி காடுகளின் நலனுக்காக பாடுபடுகிறார். இன்று அலையாத்தி காடுகள் பற்றி அறிந்து கொள்ள உலகின் பல பாகங்களிலிருந்து இவரிடம் வருகிறார்கள். வன துறையுடன் இணைந்து தன்னலமில்லா சேவையை அலையாத்தி காடுகள் பாதுகாப்பிற்காக செய்துவருகிறார். கேரளாவில் 40 வருடங்களுக்கு முன்பு 700 ச.கிமீ அலையாத்தி காடுகளிருந்த இடத்தில் இன்று 17 ச.கிமீ காடுகளே உள்ளது. இவரது சேவையால் அது மேலும் வளர்ச்சிபெறும் என்று நம்பலாம்.

கடற்கரையோரங்களில் அலையாத்தி காடுகள் மூலம் நிலஅரிப்பையும், மலைப்பாங்கான சரிவுப்பகுதிகளில் வெட்டிவேர் மூலம் மண்ணரிப்பையும் தடுப்போம். இவை நீண்ட காலத் தீர்வாக இருக்கலாம். ஆனால் இவைகள் நிரந்தர தீர்வு என்பதை மனதில் கொள்வோம்.

அலையாத்திக்காடுகள் சிறு படத்தொகுப்பு காண்க..
http://www.youtube.com/watch?v=t48NrvwKIx8

அவரது விலாசம்
K Pokkudan
Meenakshi Nilayam
Muttukkandi,
Ezhom Village
Pazhangadi Post - 670 303
kerala
படம் உதவி : வலைதளம்.

10 comments:

வேளராசி said...

உள்ளேன் ஐயா

வின்சென்ட். said...

திரு.சீனிவாசன்

உங்கள் வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்தம் தன்னலமற்ற சேவை வெற்றிபெற வாழ்த்துகள்.

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி.அவர் ஒரு புத்தகமும் ("கண்டல் காடுகல்க் கிடையில் என்டே ஜிவிதம்" )வெளியிட்டுள்ளார்.

Anonymous said...

அலையாத்தி காடு = Mangrove forest?

வின்சென்ட். said...

திரு. அனானி

உங்கள் வருகைக்கு நன்றி.மாங்குரோவ் காடுகள்,சதுப்புநிலக்காடுகள்,சுந்தர வனக்காடுகள், அலையாத்தி காடு,கண்டல்காடுகள் எல்லாமே Mangrove forest

Anonymous said...

***
20 வருடங்களாக 10,000 நாற்றுக்களுக்கு மேல் நட்டு பராமரித்ததாலும் அவற்றின் அருமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வதாலும்
***

சாதாரண விசியம் அல்ல. இப்படி ஒரு மனிதரும் அவருடைய மனமும். கட்டுரைக்கு நன்றி.

வின்சென்ட். said...

திரு.பாண்டியன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

SRINI said...

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை "

நல்லார் என்று வள்ளுவர் அன்று சொன்னது, இவர் போன்ற மனிதர்களைத்தான் போலும் !!!

இந்த செய்தி தந்தமைக்கு மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு. ஸ்ரீனிவாசன்

உங்கள் கருத்துக்கள் 100% உண்மை. வருகைக்கு மிக்க நன்றி.